சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை தொடர்பாக முக்கிய அறிக்கை ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையான சுமார் 6,000 கோடி ரூபாய், 16 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 காலகட்டத்தில் ஜிஎஸ்டி வசூல் பெரும் வீழ்ச்சி கண்ட நிலையில், அதை ஈடுகட்ட மத்திய அரசு சிறப்பு கடன் சலுகை திட்டத்தை மாநிலங்களிடையே முன்வைத்தது. இந்தத் திட்டத்திற்கு 21 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஒப்புதல் வழங்கின.
இந்நிலையில், மத்திய அரசு சுமார் 5.19 விழுக்காடு வட்டியில் சுமார் 6,000 கோடி ரூபாய் கடன் பெற்று, ஆந்திரப் பிரதேசம், அசாம், பிகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள், டெல்லி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு இந்தத் தொகையை செலுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெஸ்லாவுக்கு முந்திகொண்டு வலைவிரித்த மகாராஷ்டிரா!