நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சரிசெய்யவும், அரசின் நிதிப்பற்றாக்குறையைச் சீர் செய்யவும் கடந்த வாரம் மத்திய அமைச்சரவையின் பொருளாதாரத்திற்கான குழு முக்கிய முடிவை மேற்கொண்டது.
இந்த முடிவால் இந்தியாவின் முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களில், சில நிறுவனங்களை தனியார் மயமாக்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்தது.
பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் பங்குகளை விற்கப் போவதாகவும்; அதனால் நடப்பு நிதியாண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட முடியும் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் நடப்பு நிதியாண்டு முடிவதற்குள், அதாவது மார்ச் மாதத்துக்குள் இந்த நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதல் கட்ட நடவடிக்கையாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மதிப்பைக் கணக்கிட்டு, 50 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அந்நிறுவனத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு, ஏலத்தில் விடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தனியார் மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்?