டெல்லி: இந்திய போட்டி ஆணையமானது ஃபியூச்சர் ரீடைல் நிறுவன முதலீடு தொடர்பான வழக்கில், அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக ஃபியூச்சர் ரீடைல் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை முதலீடு தொடர்பான தகவல்களை அமேசான் நிறுவனம் முழுமையாக அளிக்காமல், மறைத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் உடனான ரூ.24,713 கோடி ஒப்பந்தம் தொடர்பாக அமேசான் நிறுவனத்துக்கும், ஃபியூச்சர் குழுமத்திற்கு இடையே கடுமையான போட்டி நிலவிவரும் நிலையில், ஃபியூச்சர் நிறுவனம் இந்திய போட்டி ஆணையத்திடம் இந்தப் புகாரை அளித்திருந்தது. அதன் மீதான விசாரணையின் போது, இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமேசான் மூலம் ஆன்லைனில் கஞ்சா விற்பனை - CAIT கடும் கண்டனம்