இது குறித்து ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ள எஸ்பிஐ, “சீனா இந்தியாவில் இறக்குமதி செய்வதில் ஒரு உறுதியான இடத்தை பற்றிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இறக்குமதியை முற்றிலுமாக திடீரென நிறுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்காது. அதுமட்டுமின்றி இறக்குமதியை எப்படி குறைக்கலாம் என்பதற்கு ஒரு வரையறையை வகுக்க வேண்டும்.
59 சீனச் செயலிகள் தடை விதித்து நமது நாட்டின் சொந்த செயலிகள் வளர்வதற்கு இடமளிக்கிறது. இருந்தப்போதிலும், குறைந்த மதிப்புள்ள உற்பத்தி பொருள்கள், மின்பொருள்கள் என சீன பொருள்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.
எவ்வாறாயினும், நமது பொருளாதார அமைப்பில் மிகவும் உறுதியாக உள்ள ஒரு நாட்டிலிருந்து ஒரே நேரத்தில் அனைத்து இறக்குமதியையும் குறைக்கக் கோருவது நியாயமற்றது. மேலும், உற்பத்தியாளர்களின் தரப்பிலிருந்தோ, நுகர்வோரின் தரப்பிலிருந்தோ பார்க்கும்போது உள்ளூர் விநியோகத்தை திடீர் இறக்குமதி நிறுத்தல் பாதிக்கக்கூடும்.
உதாரணமாக 1996-97 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவிலிருந்து எதையும் இறக்குமதி செய்யவில்லை. ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் இறக்குமதியின் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மொத்ததில் 6,844 பொருட்களை இந்தியா சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது.
அதுமட்டுமின்றி சீனாவிடமிருந்து இந்தியா இறக்குமதியை குறைத்தால் மற்ற ஆசிய நாடுகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். அப்படி இருக்கும்பட்சத்தில் சரியான அணுகுமுறைகளை கையாண்டு சீனா இறக்குமதியை படிப்படியாக குறைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...சீனாவில் இருந்து பேருந்து வாங்கும் திட்டம் மாற்றப்பட்டுள்ளது - டெல்லி அரசு...!