ETV Bharat / business

கோவிட் கால கடன் சலுகைக்கு ரூ.973 கோடி ஒப்புதல் - மத்திய அமைச்சரவை - வர்த்தக செய்திகள்

கோவிட் காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு வட்டி சலுகைக்காக மத்திய அரசு ரூ.973 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை
author img

By

Published : Jan 20, 2022, 7:55 AM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று அதன் முக்கிய முடிவுகள் வெளியிட்டப்பட்டன.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் (01.03.2020 முதல் 31.08.2020 வரை) வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுகட்ட கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு ரூ.973.74 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மனஅழுத்தத்திலிருந்து சிறு கடன்தாரர்கள் மீண்டெழ உதவும் வகையில், அவர்கள் தவணை தவறிய கடன் சலுகையை பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் உதவும் விதமாக இந்த ஊக்கத்தொகை பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் மூலம் இதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.973.74 கோடியிலிருந்து கீழ் காணும் கடன் பெற்றவர்கள் பயனடையத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

அதன்படி, "ரூ.2 கோடி வரையிலான குறு,சிறு, நடுத்தர தொழில் கடன்கள், ரூ.2 கோடி வரையிலான கல்விக் கடன்கள், ரூ.2 கோடி வரையிலான வீட்டுவசதிக் கடன், ரூ.2 கோடி வரையிலான நுகர்வோர் பயன்பாட்டு பொருள் கடன், ரூ.2 கோடி வரையிலான கிரெடிட் கார்டு தவணைகள், ரூ.2 கோடி வரையிலான வாகனக் கடன்கள், ரூ.2 கோடி வரையிலான தனிநபர் கடன்கள், ரூ.2 கோடி வரையிலான நுகர்வுக் கடன்கள்" ஆகியோருக்கு இந்த சலுகை பொருந்தும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.