அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், ஜியோவின் வருகைக்குப் பின் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அதனால் நிறுவனம் விரைவில் மூடப்படும் என்ற தகவல்கள் தேர்தலுக்கு முன்பிருந்தே ஊடகங்கிளில் பரவிவந்தன.
இந்நிலையில் தேர்தலுக்குப் பின் தற்போது மீண்டும் அந்தத் தகவல் ஊடகங்களில் பரவியது. இதுகுறித்து இன்று விளக்கமளித்துள்ள பிஎஸ்என்எல் நிர்வாகம், ஊடகங்களில் வெளியானதைப் போல பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்றும், கட்டணங்களை குறைத்துள்ளதால் தற்போது நிறுவனம கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தை மீட்க மத்திய அரசு மாற்றுத் திட்டம் தயார் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.