பிரென்ட் கச்சா எண்ணெய் 3.3 விழுக்காடு உயர்ந்து, மார்ச் 6ஆம் தேதிக்கு பிறகு அதிக விலையான பேரலுக்கு 40 டாலர் என்ற நிலையை எட்டியது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 3.9 விழுக்காடு அதிகரித்து பேரலுக்கு 37 டாலராக உயர்ந்தது.
ரஷ்யா மற்றும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு உற்பத்தியில் நாளொன்றுக்கு 97 லட்சம் பேரல்கள் வரை குறைத்துள்ளதுடன் இந்த குறைப்பு நடவடிக்கை ஆகஸ்ட் வரை நீளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பன்னாட்டு தேவை அதிகரித்து வருவதாலும் உற்பத்தி கட்டுப்பாடு நீட்டிக்கப்படுவதாலும், கச்சா எண்ணெய் விலை இனி வரும் நாட்களில் தொடர்ந்து உயரும் என கூறப்படுகிறது.