நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா தனது வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. தனது வங்கியில் கடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக டிஜிட்டல் தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
அதன்படி, பேப்பர் வேலைகள் ஏதும் இல்லாமல் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாடிக்கையாளர்கள் கடன் பெற்றுக்கொள்ளும் வசதியை பேங்க் ஆஃப் பரோடா உறுதிசெய்துள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றை 30 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இ.எம்.ஐ. தொடர்பான வசதிகளையும் தங்கள் டிஜிட்டல் தளத்திலேயே ஏற்படுத்திக்கொள்ளலாம். சிறு குறு நிறுவனங்கள், வேளாண் கடன்கள் ஆகியவற்றை எளிதில் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்பதே வங்கியின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்கோடா நிறுவன கார் விலை ஜனவரி முதல் உயர்வு