ETV Bharat / business

தனியாருக்குத் தள்ளப்படும் 5 பொதுத்துறை நிறுவனங்கள் - மத்திய அமைச்சரவை முடிவு

டெல்லி: பாரத் பெட்ரேலியம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

PSU
author img

By

Published : Nov 21, 2019, 8:06 AM IST

தனியார் மயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுனங்களுக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ' பாரத் பெட்ரோலியம், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கான்கர் (CONCOR), டி.எஃச்.டி.சி(THDC), நீப்கோ (NEEPCO) உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது' எனத் தெரிவித்தார். மேற்கண்ட நிறுவனங்கள் முழுமையாக தனியார் வசம் கொடுக்கப்படவுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கும் நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்குகளை 50 விழுக்காட்டுக்குக் கீழ் குறைத்து நிர்வாகத்தை மட்டும் தன்னிடம் வைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மேற்கண்ட நடவடிக்கைகள் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் நடைமுறைபட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த சீதாராமன், இந்நடவடிக்கை மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு வருவாய் கிட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை அரசு நிறுவனங்கள் நிதிவருவாய், நிர்வாக வசதிக்காக தனியாரிடம் ஒப்படைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பெரிய விமான போக்குவரத்துத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க: சபரிமலை யாத்திரையாக 500 கி.மீ. நடந்த நாய்!

Intro:Body:

Cabinet Committee on Economic Affairs could take up the BPCL privatisation issue this month, said sources.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.