கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் வழிகாட்டுதலின் பேரில் ஆன்லைன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய அமைச்சகம் சார்பில் இன்று சில கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அமேசான் நிறுவனம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து அமேசான் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக பின்பற்றி சேவை வழங்க அமேசான் தயாராக உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிருப்தி அளிக்கிறது. இந்தச் சூழலில் மின்னணு சாதங்கள் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்த உபகரணகங்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கின் மத்தியில் கோதுமை மாவு விலையை உயர்த்திய பதஞ்சலி நிறுவனம்!