மத்திய நிதியமைச்சகம் விவசாயிகளுக்கான சலுகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிசான் கிரெடிட் கார்டு மூலம் நாடு முழுவதும் உள்ள 1.5 கோடி விவசாயிகளுக்கு, சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் கடன், வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சார்பு இந்தியா சிறப்பு நிதிச் சலுகை திட்டம் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதுவரை 1.35 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவுமே இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது எனவும், குறைன வட்டி விகிதமாக நான்கு விழுக்காடு வட்டிக்கு இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விவசாய மக்களின் நலன் கருதி கடந்த 2019ஆம் ஆண்டில் கால்நடை விவசாயிகள், பால், மீன் பண்ணை விவசாயம் செய்பவர்களுக்கும் இந்தக் கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவகங்கையில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி - மத்திய கல்வி அமைச்சர்