ETV Bharat / business

இ.எம்.ஐ. நீட்டிப்புச் சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா? - வர்த்தகச் செய்திகள்

டெல்லி: இரண்டாவது முறையாக இ.எம்.ஐ. காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், இம்முறை கடன் தவணை விவகாரத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bank
Bank
author img

By

Published : May 23, 2020, 4:06 PM IST

வட்டிக்குறைப்பு, இ.எம்.ஐ. கடன் தவணை தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார். அதன்படி, வீடு, வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், முதல் தடவை தவணை கால நீட்டிப்புக்கு அளித்த சலுகை போலவே, இரண்டாம் முறையும் வங்கிகள் கடைப்பிடிக்க வாய்ப்பு குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அறிவிப்பின்படி பெரும்பாலானோருக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், இம்முறை அதிக தேவை கொண்டவர்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்படும் எனவும் மற்றவர்கள் தவணையை செலுத்த அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒழுங்காகத் தவணை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்ற நோக்கிலேயே ரிசர்வ் வங்கி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் 27 பூச்சிக்கொல்லிகளுக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.