787 கோடி ரூபாய் வங்கி மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் மோசர் பேர் சோலார் லிமிடெட் நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில், அந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ரதுல் பூரிக்கு சொந்தமான இடங்கள், நெருங்கிய நபர்களின் வீடுகள் உள்ளிட்ட ஏழு இடங்களில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் இன்று (ஜூன் 26) அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரதுல் பூரியின் தந்தை தீபக் பூரியின் அலுவலக வளாகம், வீடு ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
787 கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கு தொடர்பாக சோதனை மேற்கொண்டு வரும் சிபிஐ அலுவலர்கள், தகுந்த பாதுகாப்பு உடைகள் அணிந்து சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : கரோனா காலத்தில் உச்சம் தொட்ட டீசல் விலை