நாடு முழுவதும் கரோனா லாக்டவுனில் சூழலுக்கு ஏற்றார்போல், ஏப்ரல் 20ஆம் தேதிக்குப்பின் தளர்வுகள் மேற்கொள்ளலாம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதன்படி மத்திய உள்ளதுறை அமைச்சகம் பல்வேறு துறைகளுக்கு வழிகாட்டுதலை அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் குழுமத்தின் தலைவர் ராஜன் வதேரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், 'மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கொண்டு செயல்பட, நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் இயக்கத்தைத் தொடங்குவதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஆனால், இத்தகைய சூழலில் தொழிலாளர்கள் கிடைப்பது என்பதும் பெரும் சவாலாகும். பல நிறுவனங்கள் 20 நாட்களுக்கும் மேல் மூடியுள்ளதால், கீழ் மட்ட அளவில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கே சென்றுவிட்டனர். இவர்களை நிறுவனங்களுக்கு மீண்டும் கொண்டு வருவது, தற்போதைய சூழலில் சவாலான காரியம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிசிஎஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை...!