கரோனா சூழல் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டுவருகிறது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை கணிசமாக குறைந்தும், சற்று அதிகரித்தும்வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளன.
தங்கம் விலை
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 36 ஆயிரத்து 56 ரூபாய் என விற்பனையாகிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 48 ரூபாய் அதிகரித்து, நான்காயிரத்து 507 ரூபாய் என நிர்ணயம்செய்யப்பட்டது. ஆக சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 56 ரூபாய் என விற்பனையாகிறது.
24 காரட் தூயத் தங்கத்தின் விலை கிராமுக்கு நான்காயிரத்து 871 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு 38 ஆயிரத்து 968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்து 672 ரூபாய் என விற்பனையானது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.68.70-க்கு விற்பனையாகிறது. கிலோ வெள்ளி 1000 ரூபாய் அதிகரித்து 68 ஆயிரத்து 700 என விற்பனையாகிறது.
பிளாட்டினம்
பிளாட்டினத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து ரூ.3,247-க்கு விற்பனையாகிறது. எட்டு கிராம் பிளாட்டினம் 288 ரூபாயாக குறைந்து 25 ஆயிரத்து 976 ரூபாய் என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'பெருந்தொற்றுக்குப் பின் சென்னையில் ஸ்டார்ட்அப் சூழல் எப்படி இருக்கிறது?'