சொகுசு கார் நிறுவனமா ஆடி கடந்த வியாழக்கிழமை தனது புதிய தலைமுறை ஆடி A6 விற்பனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய தலைமுறை ஆடி A6 கார்களின் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்தக் கார்களின் விலை ரூ. 54.2 லட்சம் முதல் தொடங்குகிறது.
இந்தியாவில் ஆடி கார் என்றாலே ஒரு தனி கெத்து என்று பலரும் கூறுவது போல், ஆடி A6 மாடலுக்கு சந்தையில் மிகப்பெரிய மதிப்பும் உள்ளது. மேலும் பொதுவாழ்க்கையில் பிரபலமாக இருக்கும் பலரும் ஆடி ஏ6 காரை பயன்படுத்துவதை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடியும்.
இதன் விற்பனை அதிகரித்து கொண்டே செல்வதால், தற்போது இந்த ஆடி A6 காரினுடைய எட்டாவது தலைமுறை மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளோம் என ஆடி நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி பல்பீர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார். இந்த கார் ப்ரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய தலைமுறை ஆடி ஏ6 காரில் 2.0L TFSI எஞ்சின் உள்ளது. இது 245 எச்பி பவர் மற்றும் 370 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதாவது இந்தத் திறனைக் கொண்டு 6.8 நொடிகளில் 0-விலிருந்து 100 km வேகத்தை எட்ட முடியும்.
மேலும் சந்தையில் புதிய தலைமுறை ஆடி A6 வருகை மற்ற சொகுசு கார்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எட்டு ஆண்டுகள் காணாத சரிவை கண்ட மாருதி சுஸுகி