ETV Bharat / business

மோசமாகும் கரோனா பாதிப்பு: தொழிலாளர்கள் மீள்வது கடினம் - சர்வதேச தொழிலாளர் அமைப்பு!

கோவிட்-19 தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்பது முன்பு கணிக்கப்பட்டிருந்ததைவிட மிக மோசமாக உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

International Labour Organization
International Labour Organization
author img

By

Published : Jul 2, 2020, 3:19 PM IST

சர்வதேச தொழிலாளர் அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி, கோவிட்-19 தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாம் இழந்திருக்கும் மனித உழைப்பு நேரம் என்பது முன்பு கணிக்கப்பட்டிருந்ததைவிட மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது நிலவிவரும் நிச்சமற்ற சூழ்நிலை காரணமாக, மிகச் சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், கரோனா தொற்றுக்கு முந்தைய நிலையை அடைவது கடினம் என்றும் இதனால் பெருமளவு வேலைவாய்ப்பு ஏற்படும் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மனித உழைப்பு நேரம் என்பது 14 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது 400 மில்லியன் முழு நேர பணியாளர்கள் வேலைய இழந்ததற்கு சமம். இது நாங்கள் முன்பு கணித்ததைவிட(10.7 விழுக்காடு - 305 மில்லியன் வேலை) அதிகம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பல புதிய நாடுகள் குறிப்பாக வளரும் பொருளாதாரங்கள் இந்த தொற்று காரணமாக அதிகப்படியான மனித உழைப்பு நாள்களை இழந்துள்ளன. அமெரிக்கா(18.3%), ஐரோப்பியா, மத்திய ஆசியா(13.9%), ஆசியா பசிபிக்(13.5%), சவுதி அரேபியா(13.2%), ஆப்பிரிக்கா(12.1%) ஆகிய நாடுகளில் மனிகத உழைப்பு நாள்கள் வெகுவாக குறைந்துள்ளன.

உலகின் பெரும்பான்மையான தொழிலாளர்கள் (93 விழுக்காடு) ஒருவித கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் வாழ்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில், பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

2020இன் இரண்டாம் பாதி எப்படி இருக்கும்?

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையிலிருந்து மீள சர்வதேச தொழிலாளர் அமைப்பு மூன்று வகையான தீர்வைகளை முன்வைத்துள்ளது - தற்போதுள்ள அடிப்படை சூழ்நிலை, அவநம்பிக்கை சூழ்நிலை மற்றும் நம்பிக்கை சூழ்நிலை. இந்த நிலையின் நீண்ட கால விளைவு என்பது இந்தத் தொற்று வரும் காலங்களில் எப்படி இருக்கும், அரசு கொள்கைகள் உள்ளிட்டவற்றை பொறுத்து இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அடிப்படை சூழ்நிலை:

தற்போதுள்ள கணிப்புகளுக்கு ஏற்ப பொருளாதார நடவடிக்கைகளில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டு, பணிபுரிவதில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, நுகர்வு மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும்போது, 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4.9 விழுக்காடு (140 மில்லியன் முழுநேர வேலைகளுக்கு சமம்) வேலை நேரம் பாதிக்கப்படும்.

அவநம்பிக்கை சூழ்நிலை

கோவிட்-19 தொற்று இரண்டாவது முறையாக மீண்டும் தாக்கி, மீண்டும் தொழில் துறையினருக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்பட்சத்தில் 11.9 விழுக்காடு (340 மில்லியன் முழுநேர வேலைகளுக்கு சமம்) வேலை நேரம் பாதிக்கப்படும்.

நம்பிக்கை சூழ்நிலை

அனைத்து பொருளாதர நடவடிக்கைகளும் விரைவாக மீண்டும் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரித்து, தேவைகள் அதிகரிக்கும்பட்சத்தில், 1.2 விழுக்காடு (34 மில்லியன் முழுநேர வேலைகளுக்கு சமம்) வேலை நேரம் மட்டுமே பாதிக்கப்படும்.

பெண்கள் மீதுள்ள தாக்கம்

கோவிட்-19 தொற்று காரணமாக பெண் தொழிலாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பாலின சமத்துவத்திற்கான முன்னேற்றங்கள் அனைத்தும் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தங்குமிடம், உணவு, விற்பனை, உற்பத்தி போன்ற துறைகளில் பெண்கள் மிக அதிகளவில் வேலை செய்கின்றனர். இந்த துறைகள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெண் தெழிலாளர்களின் நிலை மேசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் 510 மில்லியன் அல்லது 40 விழுக்காடு பெண்களே பணிபுரிகின்றனர்.

இதைத்தாண்டி பெண்கள் வீட்டு வேலை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் அதிகளவில் பணிபுரிகிறார்கள். இது அவர்களை அதிக ஆபத்தில் தள்ளுகின்றன: கரோனா பரவல் காரணமாக இவர்களின் வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அதிகளவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு பொது இயக்குநர் கை ரைடர் கூறுகையில், "அடுத்த வாரம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கோவிட் -19 மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உயர்மட்ட அலுவலர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை காணொலி காட்சி மூலம் நடத்துகிறது.

இது உலக நாடுகள், தொழிலாளர்கள், முதலாளிகள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க புதுமையான யோசனைகளை முன்வைக்கவும் விவாதிக்கவும் ஒரு சிறந்த களமாக அமையும் என்று நான் நம்புகிறேன். வேலைவாய்ப்புகளில் சிறந்த எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: இந்திய - சீன மோதல் எதிரொலி: ரத்து செய்யப்பட்ட பிஎஸ்என்எல் டெண்டர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.