மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் தொழில் செய்ய சிறந்த மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டார். 180 சீர்திருத்த நடவடிக்கைகளை பல்வேறு கூறுகளில் ஆராய்ந்து அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை முன்வைத்து மாநிலங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேச இரண்டாம் இடத்திலும், தெலங்கானா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 14ஆவது இடத்தில் உள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பேசுகையில், மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நடைபெற்று வருகிறது. வணிக நடவடிக்கைகள் தொடர்பான கள நிலவரங்கள் முறையே ஆராயப்பட்டு அதை வைத்தே இந்தப் பட்டியில் தயார் செய்யப்பட்டது எனக் கூறினார்.
மிக மோசமாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் மேகாலயாவும், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தொழிலாளர் சட்டம், சூழியல் சார்ந்த ஒப்புதல், நிலம் கையகப்படுத்துவது, கட்டுமான பணிகளுக்கான ஒப்புதல் உள்ளிட்ட அளவுகளை வைத்தே இந்தப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி - 100 கூடுதல் விமானங்களைக் களமிறக்கும் கோ ஏர்