ETV Bharat / business

அமேசான் மூன்றாம் நபர் விற்பனை 50% உயர்வு - கோவிட்-19 ஆன்லைன் விற்பனை

2020ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனத்தின் மூன்றாம் நபர் விற்பனை 50% விழுக்காடு உயர்வை சந்தித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Amazon
Amazon
author img

By

Published : Dec 29, 2020, 3:29 PM IST

கோவிட்-19 தாக்கம் சர்வதேச அரங்கிற்கு பெரும் பின்னடைவைத் தந்தாலும், ஆன்லைன் விற்பனை இந்தாண்டு சிறப்பான உயர்வைக் கண்டது. இதுதொடர்பாக உலகின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில், சுதந்திர சந்தை விற்பனையானது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு சிறப்பான உயர்வை கண்டுள்ளது. சிறுகுறு வணிகர்கள் பலன் பெறும் வகையில், பல்வேறு சந்தைத் திட்டங்களை அமேசான் முன்னெடுத்தது. அதன் விளைவாக, மூன்றாம் நபர் விற்பனை கடந்தாண்டை காட்டிலும் 50 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.

இந்த சிறப்பான வர்த்தகத்தை சாத்தியப்படுத்தி காட்டிய அமேசான் முன்னிலை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்தாண்டு ஆன்லைன் விற்பனை சந்தையை விரிவுப்படுத்த சுமார் 100 மில்லியன் டாலர் தொகையை அமேசான் விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா காலத்திலும் வசூலில் சாதனை படைத்த 'வொண்டர் வுமன் 1984'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.