ஆன்லைன் வணிகத்தில் மாபெரும் நிறுவனமான அமேசான், உலகளவில் எதிர்பாராத அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தை விரிவுபடுத்த பல்வேறு முயற்சிகள் செய்துவருவதோடு, இந்தியாவில் அதிக முதலீடு செய்யவுள்ளோம் என்ற செய்தியை, கடந்த மாதம் அந்த நிறுவனம் வெளியிட்டது.
இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பிய அமேசான் ஹைதராபாத்தில் மிகப்பெரிய கிளை நிறுவனத்தையும், சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிய மிகப்பெரிய விநியோக நிலையத்தையும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் உயர் அதிகாரி டாம் டெய்லர் (Tom Taylor), " இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆன்லைன் வணிகம் அமேசான் என்றும், அமேசானின் மொத்த பங்குகளில் 30 விழுக்காடு பங்குகள் இந்தியாவில் தான் உள்ளன" எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் இந்தியாவில் அமேசான் அதிகம் முதலீடு செய்யவுள்ளதாகவும், அதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
இளைஞர்களுக்கு ஓர் நற்செய்தி - விரைவில் இந்தியர்களுக்கு அமேசானில் வேலை!