ஆன்லைன் வணிகத்தில் மாபெரும் நிறுவனமான அமேசான், உலகளவில் எதிர்பாராத அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தை விரிவுபடுத்த பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் 'புக் மை ஷோ' இணையதளத்துடன் கைகோர்த்துள்ளோம் என்றும்; இனி திரைப்பட டிக்கெட்டுக்களை அமேசான் இணையதளம் அல்லது அமேசான் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அமேசான் தலைமை அதிகாரி மகேந்திர நெருக்கர் தெரிவித்துள்ளார்.
இது "ஷாப் பை கேட்டகிரி" மூலம் "மூவி டிக்கெட்ஸ்"யை கிளிக் செய்து, பதிவு செய்யும் வசதியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டமைப்பு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் விரிவு படுத்தலாம் என ’புக் மை ஷோ’ தலைமை அதிகாரி ஆஷிஷ் ஹேம்ராஜைனி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஃபேஸ்புக்கின் தனித்துவத்தைக் காட்டுவதற்காக புதிய லோகோ அறிமுகம்!