டெல்லி: நாட்டின் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்கத்தை 60 விழுக்காடாக அதிகரித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த மே 25ஆம் தேதி உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை 45 விழுக்காடு இயக்கத்தை தொடங்கியது.
வெளிநாட்டு பயணிகள் விமான போக்குவரத்து சேவை ’வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் மூலம் நடைபெற்றுவருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து விமான போக்குவரத்துத்துறை வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்டுவருகிறது.
இந்நிலையில், லாக்டவுனில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை அதிகரித்து மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 58 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை செலுத்த வோடபோன் தீவிரம்