இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 108 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூகவியல் நிபுணர்கள் 'இந்தியா அரசின் பொருளாதார நிறுவனங்களின் சுதந்திரம்' குறித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
108 eminent academics and scholars have condemned the Modi government for suppressing unfavourable unemployment data.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Government's likely response: they are anti-nationals.
">108 eminent academics and scholars have condemned the Modi government for suppressing unfavourable unemployment data.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 15, 2019
Government's likely response: they are anti-nationals.108 eminent academics and scholars have condemned the Modi government for suppressing unfavourable unemployment data.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 15, 2019
Government's likely response: they are anti-nationals.
அதில், 'ஜீ.டி.பி என்ற பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு போன்ற பொதுப் புள்ளி விவரங்களை வெளியிடும் அமைப்புகளில் மத்திய அரசின் நிர்வாகத் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சி.எஸ்.ஓ, என்.எஸ்.எஸ்.ஓ போன்ற அமைப்புகளின் நம்பகத்தன்மை நிர்வாகத் தலையீட்டால் பதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதற்கு எதிராக அனைத்து தொழில்முறை புள்ளியியல் நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள், ஆய்வாளர்கள், தங்களின் கொள்கைகள், சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு குரல் கொடுக்க வேண்டும். இந்த தலையீட்டால் உலகளவில் இந்த அமைப்புகளின் தரமானது கேள்விக்குள்ளாக்கப்படும்' என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் அப்ஜீத் பனர்ஜீ, பிரதாப் பர்தன், சுதா நாராயனன், ஜேம்ஸ் பாய்ஸே உள்ளிட்ட 108 முன்னணி நிபுணர்கள் கையெழுத்து இட்டுள்ளனர்.
அன்மையில், நாட்டின் வேலையின்மை புள்ளி விவரங்களை வெளியிடுவது குறித்து என்.எஸ்.எஸ்.ஓ. அமைப்பின் நிர்வாகத்தில் இருந்த 2 பேர் அரசிடம் அதிருப்பதி ஏற்பட்டு பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.