சேலம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் அருகில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயிர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ. 1022.96 கோடி மதிப்பீட்டில் சுமார் 1,102 .25 ஏக்கர் பரப்பளவில் உலக தரத்தில் இந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சி நிலையத்தில் உள்நாட்டின கால்நடை பண்ணை பிரிவு, பால் பொருள்கள் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், மீன்வளர்ப்பு செயல்முறை விளக்க பிரிவு, முதுநிலை கல்வி மையம் விரிவாக்கம், திறன் மேம்பாட்டு ஆராய்ச்சி பிரிவு ஆராய்ச்சி கழகம், இறைச்சிக் கூடம், பசுந்தீவன ஆராய்ச்சிப் பிரிவு, பொதுமக்கள் கலந்துரையாடும் பிரிவு என பல்வேறு வகையில் புதிய கட்டடங்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்" என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதாக அறிய முடிகிறது.