‘இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் முதல் பெண் நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார்’
பட்ஜெட் தாக்கல் நிறைவு: 11 மணிக்கு பட்ஜெட் அறிக்கை வாசிக்கத் தொடங்கி 2 மணி நேரம் 9 நிமிடங்களுக்குப் பின்னர் 1.09 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்
1:10 PM
- அனைத்து மக்களிடமும் பட்ஜெட்டுக்காக பரிந்துரை பெறப்பட்டது.
- நிதி பற்றாக்குறை 3.4 விழுக்காட்டில் இருந்து 3.3ஆக குறைந்தது.
- நடப்பாண்டில் நாட்டின் பொருளாதாரம் 3 லட்சம் கோடி டாலராக உயரும்.
1:05 PM
- தங்கத்துக்கான இறக்குமதி வரி 10 விழுக்காட்டில் இருந்து 12.5ஆக உயர்வு
1.00 PM
- 2 முதல் 5 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 3 விழுக்காடு வரை கூடுதல் வரி செலுத்த வேண்டும்.
- 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி 7 விழுக்காடாக உயர்வு.
- பெரும் பணக்காரர்களுக்கு வரி உயர்த்தப்படும்.
12:55 PM
- 120 கோடி இந்தியர்கள் ஆதார் காட்டு வைத்துள்ளனர். பான் கார்டு இன்றி ஆதார் கார்டு வைத்தும் வரி செலுத்தலாம்.
- வீட்டு கடன் வாங்குவோருக்கு 1.5 லட்சம் வரிச்சலுகை அளிக்கப்படும்.
12:50 PM
- உலக அளவில் மின்-வாகனங்கள் தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். மின்-வாகனங்கள் வாங்குவோருக்கு வரிச் சலுகை அளிக்கப்படும்.
- பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு
*மூன்று லட்சம் ரூபாயாக இருந்த தனி நபர் வருமான வரியின் உச்ச வரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது*
பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு வரிவிதிப்பு தொடர்பான அறிவுரை வழங்க பிசிராந்தையார் பாடிய ‘காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே’ என தொடங்கும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரை
12:40 PM
- உலகத் தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும்
- ரிசர்வ் வங்கி மூலம் வீடு கட்டித் தரும் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய நாணயம் அறிமுகம்
- கடந்த 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 விழுக்காடு உயர்ந்துள்ளது.
- 400 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 விழுக்காடு வரி
12:30 PM
- ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பதில் உள்ள சிக்கல்களைக் களைய முன்னுரிமை
- வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள்
- பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதின் மூலம் 1.05 லட்சம் கோடி திரட்ட திட்டம்.
- நாட்டின் ஜிடிபியில் மொத்த கடன் அளவு ஐந்து விழுக்காட்டுக்கும் கீழாக குறைந்துள்ளது.
12:25 PM
- அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்கு 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
- ரிசர்வ் வங்கி மூலம் வீடு கட்டித் தரும் நிறுவனங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய நாணாயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
12:20 PM
- உலகத்தரம் வாய்ந்த 17 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்
- திவால் சட்டம் மூலம் 4 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டது.
- பொதுத்துறை வங்கிகளில் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
- கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வாராக்கடன் 1 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
12:15 PM
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் 35 கோடி எல்.இ.டி பல்பு விநியோகம்; இதன் மூலம் 18,000 கோடி மிச்சபடுத்தப்பட்டுள்ளது.
- இந்தத் தேர்தலில் அதிக அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர், அதிக அளவில் பெண்களுக்கான திட்டம் கொண்டுவரப்படும், முத்ரா திட்டம் மூலம் பெண்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும், அவர்கள் 180 நாட்கள் காத்திருக்க தேவையில்லை.
12:10 PM
- தற்போது 3 இந்திய கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களுக்கு முன்னேறியுள்ளன.
- வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க "இந்தியாவில் பயலுங்கள்" திட்டம்
- "விளையாடு இந்தியா" திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்
- பிரதமர் கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி
- எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நடவடிக்கை
- மரபுசார் தொழிற்பயிற்சி மற்றும் 3d, அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு உட்பட துறைகளிலும் பயிற்சி
- நாடு முழுவதும் 4 தொழிலாளர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும்.
12:05 PM
- மெட்ரோ ரயில் தேசம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
- ‘ஸ்டடி இன் இந்தியா’ திட்டம் மூலம் கல்வி தரத்தை உயர்த்த திட்டம்’
- உலகத்தரம் வாய்ந்த உயர்நிலை கல்வி நிலையங்கள் அமைக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- தொழிலாளர்கள் சட்டம் மாற்றியமைக்கப்படும்
12:00 PM
- கடைசி ஐந்து ஆண்டுகளில் 9.64 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.
- அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி வழங்க நடவடிக்கை.
- 95 விழுக்காடு நகரங்களில் திறந்த வெளி கழிப்பிடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
- தேசிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
11:50 PM
- 2022க்குள் அனைவருக்கும் வீடு, எரிவாயு இணைப்பு வழங்க திட்டம்
- 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை
11:45 PM
- அந்நிய நேரடி முதலீட்டுக்கு அதிக கவனம் செலுத்தப்படும், காப்பீட்டுத்துறைக்கு 100 சதவீத அந்நிய முதலீடு அறிவிப்பு
11:30 PM
- பாதுகாப்பு, சிறு குறு தொழிற்சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டம்
- மின்சார வாகனங்கள் உற்பத்திக்கு தனிச்சலுகைகள், மானியங்கள் வழங்கப்படும்.
- வரும் ஆண்டுகளில் ரயில்வே முதலீட்டுக்கு 50 லட்சம் கோடி ரூபாய் தேவை.
- அனைவருக்கும் வீடு என்ற நோக்கில் அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
- வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
- ஒரே நாடு ஒரே மின்தடம் என்னும் திட்டதின் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.
11:22 AM
- 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார சக்தியாக இந்தியாவை உயர்த்த வேண்டும்.
11:18 AM
- இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய பொருளாதாரத்தை மூன்று லட்சம் கோடி டாலராக உயர்த்த திட்டம்
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்துக்கொண்டிருக்கிறார்.