சான் பிரான்சிஸ்கோ: விளம்பரதார்களுக்கு வாடிக்கையாளர்களை இலகுவாக அணுகும் முயற்சியாக, பல புதிய அம்சங்களை விளம்பரம் பதிவிடுபவர்களுக்கு யூடியூப் நிறுவனம் வழங்கி சோதனை செய்துவருகிறது.
இதன்மூலம் விளம்பரத்திலிருந்தே பிடித்த பொருள்களை பதிவு செய்து கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சோதனை முயற்சியாக இவை நிறுவப்பட்டு கண்காணிப்பில் உள்ளது. வீடியோக்கள் மூலம் விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்ய யூடியூப் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதைப் பயன்படுத்தி அனைத்து துறையினரும் யூடியூபில் விளம்பரம் செய்து வருகின்றனர்.
பல நொடிகள் முதல் நிமிடங்கள் வரையில் இந்த வீடியோ விளம்பரங்களை உள்ளீடு செய்ய யூடியூப் அனுமதியளிக்கிறது. தற்போது அதை மேம்பட்ட வகையில் விளம்பரதாரர்கள் பயன்படுத்த புதிய இணையக் கருவிகளை கூகுள் நிறுவியுள்ளது.
இதன் ஆதரவுடன் வாடிக்கையாளர்களை, விளம்பரங்களை பார்த்துக் கொண்டிருக்கும் தருவாயில், அப்பொருள்கள் வாங்கவேண்டும் என்று விருப்பப்பட்டால், அந்த விளம்பரத்தின் மூலமாகவே பொருள்களை பதிவுசெய்து வாங்கிக் கொள்ள முடியும்.