ETV Bharat / briefs

17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது! - Youth arrested for marrying 17-year-old girl in Coimbatore

கோவை: 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Youth arrested for marrying 17-year-old girl in Coimbatore

author img

By

Published : Sep 11, 2020, 5:16 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 23). இவர் கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி பணிபுரிந்து கொண்டிருந்த போது இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இருவரும் பழனிக்குச் சென்று திருமணம் செய்துள்ளனர். இதனிடையே, சிறுமியின் பெற்றொர் சிறுமியை காணவில்லை என்று போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதே சமயம் திருமணம் செய்த தம்பதியினர் பாதுகாப்பு வேண்டி பழனி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு காவல் துறையினர் விசாரிக்கையில் திருமண பெண்ணிற்கு 17 வயது என்பதும் கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்திற்கு பழனி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து, போத்தனூர் காவல்துறையினர் பழனிக்கு சென்று இருவரையும் கோவைக்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து, சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த விக்னேஷை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.