ETV Bharat / briefs

கட்டையால் அடித்ததால் இளைஞர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக கட்டையால் அடித்ததால், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Youngster murder
Youngster murder
author img

By

Published : Jun 17, 2020, 5:53 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில், மருவத்தூர் பெரிய தெருவில் வசித்துவருபவர் கட்டட தொழிலாளி சுகதேவ் (30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்த், பாலகுரு, சிவசாமி ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று இரவு மேற்கண்ட நபர்களுடன் சுகதேவ்விற்கு வாய் வார்த்தை ஏற்பட்டு, பின்னர் அது அடிதடியாக மாறியுள்ளது. அப்போது, கட்டையால் அடித்ததில் பலத்தக்காயம் ஏற்பட்டு, சுகதேவ் உயிருக்குப் போராடும் நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நேற்று (ஜூன் 16) மதியம் இரண்டு மணியளவில் சிகிச்சை பலனின்றி சுகதேவ் உயிரிழந்தார். இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், அரவிந்த் ஆகியோரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்து முன்னணி முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.