திருப்பூர் கருவம்பாளையம் தொடக்கப்பள்ளி 2ஆம் வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (49). இவரது தம்பி ராஜேந்திரன் (40). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. திருப்பூரில் ஆலாங்காடு பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு குணசேகரன் தலையில் ரத்த காயத்துடன் வீட்டிற்குள் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரனும் குணசேகரனும் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டிலிருந்த குளவி கல்லால் அண்ணன் குணசேகரனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.