ETV Bharat / briefs

WT20 challenge: வெலாசிட்டி திரில் வெற்றி - வெலாசிட்டி

டிரயல் பிளசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியில், வெலாசிட்டி அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

WT20 challenge: வெலாசிட்டி த்ரில் வெற்றி
author img

By

Published : May 8, 2019, 8:13 PM IST

ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே, மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேலஞ்ச் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஸ்மிதிரி மந்தானா தலைமையிலான டிரயல் பிளேசர்ஸ், மித்தாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த டிரயல் பிளசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்லின் தியோல் 43 ரன்களை அடித்தார். வெலாசிட்டி அணி தரப்பில் ஏக்தா பிஷ்ட், அமெலியா கேர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, 113 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய வெலாசிட்டி அணி, 17ஆவது ஓவரில் 111 ரன்களை எடுத்திருந்த போது, அதிரடியாக ஆடிய டேனியல் வியாட் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், கேப்டன் மித்தாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே, அமெலியா கேர் ஆகியோர் அடுத்ததடுத்தது பெவிலியனுக்கு திரும்பினர். இதனால், ஆட்டம் சற்று பரபரப்பாக அமைந்தது. இருப்பினும், 18ஆவது ஓவரின் கடைசி பந்தில் சுஷ்ஸ்ரீ பிரதான் இரண்டு ரன்களை அடித்தார்.

இதனால், வெலாசிட்டி அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. டிரயல் பிளசர்ஸ் அணி சார்பில் தீப்தி ஷர்மா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Intro:Body:

WT20 challeng - velocity wins against Trailblazers

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.