தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது. தாய்ப்பால் கொடுக்காத பட்சத்தில் குழந்தைகளுக்குப் பல நோய் தாக்கும் இடர் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டாமல் இருந்தால் வரும் ஆபத்துகளைக் கணக்கீடு செய்துபார்த்தால், தாய்ப்பால் கொடுப்பதால் கரோனா பரவும் என்பது சிறிய ஆபத்துதான்.
எனவே கோவிட்-19 பாதித்த தாய்மார்களிடத்திலிருந்து குழந்தையைப் பிரித்துவைக்காமல், அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கான ஊக்கத்தை அளிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.