பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஊரின் மையப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை இருப்பதால் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் ஏராளமான ஆண்கள் குடித்து விட்டு வருவதால் குடும்பத்தகராறு அதிகம் ஏற்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அதேசமயம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.