ETV Bharat / briefs

மேற்கு வங்க காவல்துறை ஆளும்கட்சியின் ஏவல்துறையாக செயல்படுகிறதா?

author img

By

Published : Jul 24, 2020, 6:15 AM IST

கொல்கத்தா : மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் அடியாட்களாக காவல்துறையினர் செயல்படுகிறார்கள் என அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க காவல்துறை ஆளும்கட்சியின் ஏவல்துறையாக செயல்படுகிறதா ?

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது. மேற்கு வங்க காவல்துறையானது, அதன் விதிமுறைகளின்படி செயல்படாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினரால் குறிவைக்கப்படுகிறார்கள். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் பொது இடங்களிலேயே மாநில காவல்துறையினரால் வேட்டையாடப்படுகிறார்கள். இது ஜனநாயக விரோதமானது. மேற்கு வங்க மாநில ஆளுநராக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை இந்த ஆபத்தான வீழ்ச்சியைக் கண்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

இது தொடர்பாக கலந்துரையாட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது நேரத்தை ஒதுக்கி என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, அரசியல் மற்றும் கோவிட் -19 நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கலந்துரையாடிய அடுத்தநாளே ஆளுநர் தங்கர் இவ்வாறு கூறியிருப்பதாக அறிய முடிகிறது. மத்திய பாஜக அரசுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தங்கருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் தொடர்ந்து பனிப் போர் நடைபெற்றுவருகிறது.

மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி தலையிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.