தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் படி, கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வெளி மாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 875 பேர், தருமபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 266 பேர், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 217 பேர் என மொத்தம் 1,358 நபர்கள், ஓசூர் ரயில் நிலையத்திலிருந்து சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரு நபருக்கு பயணச் சீட்டு தலா ரூ. 875 வீதம் 1358 பேருக்கு 11 லட்சத்து 88 ஆயிரத்து 250 ரூபாய் தொகையை பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் தமிழ்நாடு அரசு செலுத்தியது.
முன்னதாக, பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. மேலும் சப்பாத்தி, புளிசாதம், 2 லிட்டர் குடிநீர் உள்ளிட்ட பொருள்களை ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.