ETV Bharat / briefs

அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர்: பொதுமக்கள் சாலை மறியல் - கழிவுநீர் சுத்திகரிக்கப்பட பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி: மணப்பாறை அரிசி ஆலையில் இருந்து காற்றில் உமிகள் பரவி கலந்து வருவதாகவும், அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாததால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறி, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர்: பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Jun 16, 2020, 2:45 AM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கிவரும் தனிநபர் அரிசி ஆலையில் இருந்து காற்றில் உமிகள் பரவி கலந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பொதுக்கிணற்றில் உமிகள் மிதந்துகிடந்துள்ளன.

அதைப் பொதுமக்கள் வீட்டுக்கும் பயன்படுத்தி வருவதாகவும், அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல், ஆலைக்கு வெளியிலேயே தேங்கிக் கிடப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அனைத்துத் துறைகளுக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மணப்பாறை வட்டாட்சியர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்துச் செல்லுமாறு வலியுறுத்தினர்.

அப்போது பொதுமக்கள் வட்டாட்சியர் தமிழ் கனியிடம், மக்கள் பிரச்னைகளைக் கண்டு கொள்ளாதது ஏன் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.