ETV Bharat / briefs

விஷாலின் ‘சக்ரா’ டிரெய்லர் வெளியீடு

author img

By

Published : Jun 27, 2020, 6:48 PM IST

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

விஷால்
விஷால்

விஷால் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ள திரைப்படம் 'சக்ரா'.

இதில் விஷால் கதாநாயகனாக நடிக்க, ஷ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், சிருஷ்டி டாங்கே, கே.ஆர். விஜயா, மனோபாலா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், 'சக்ரா' திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆன்லைன் வர்த்தக மோசடிகளைப் பின்னணியாகக்கொண்டு சைபர் ஹேக்கர்கள் குறித்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.

மேலும் இத்திரைப்படம் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படம் போலவே இருக்கிறது என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.