குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத் தினம் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் அரசுத் துறை அலுவலர்கள் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
அப்போது அனைவரும் எழுந்து நின்று, இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.