நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி கேபிட்டல்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில், விஜய் சங்கர், முகமது நபி ஆகியோர் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடினர். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கப்தில் 36, மனீஷ் பாண்டே 30 ரன்களை அடித்தனர்.
விஜய் சங்கர் 10 பந்துகளில் 25 ரன்களிலும், முகமது நபி 13 பந்துகளில் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பவுல் மூன்று, இஷாந்த் ஷர்மா இரண்டு, போல்ட், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.