மகாராஷ்டிராவில் டாக்டர் அம்பேத்கரின் பூர்வீக இல்லம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் இல்லத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் வீர செங்கோலன், மண்டல பொறுப்பாளர் கிட்டு உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.