கரோனா தடுப்புப் பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம், சத்துவாச்சரி ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் சிபிஎம் கட்சியின் எஐடியுசி சார்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலில் மத்திய, மாநில அரசுகளின் பிற்போக்கான நடவடிக்கைகளில் மக்களின் வாழ்கை நிலை குலைந்துள்ளது என்றும், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.