கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக காஞ்சிபுரம் ரயில்வே ரோடு சாலைப் பகுதியில் செயல்பட்டுவந்த ராஜாஜி காய்கறிச் சந்தை மூடப்பட்டு தற்காலிகமாக காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலை பகுதிக்கு காய்கறிச் சந்தை மாற்றப்பட்டு, வியாபாரம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று பெய்த கனமழையின் காரணமாக காய்கறிச் சந்தை முழுவதும் மழைநீர் தேங்கி வியாபாரிகள் கடை வைக்க முடியாமல் அவதியடைந்தனர். மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும் மழை நீர் இல்லாத பகுதியில் அருகருகே கடை வைத்து சேறும், சகதியும் உள்ள இடத்தில் வியாபாரம் செய்துவருகின்றனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு சந்தையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:72 ஆண்டுகளாக சாலையின்றி தவித்த மக்கள்; ஆட்சியரின் முயற்சியால் கிடைத்த மண் சாலை!