ETV Bharat / briefs

மழையால் சேதமடைந்த காய்கறி சந்தை - மாற்று இடம் கொடுக்குமா பேரூராட்சி - காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி

காஞ்சிபுரம்: கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் வையாவூா் சாலையில் தற்காலிகமாக தொடங்கப்பட்ட காய்கறி சந்தைப் பகுதி முழுவதும் மழைநீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் வியாபாரிகள் மாற்று இடம் கோரியுள்ளனர்.

மழையால் சேதமடைந்த காய்கறி சந்தை - மாற்று இடம் கொடுக்குமா பேரூராட்சி

author img

By

Published : Jul 15, 2020, 3:27 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய ரயில் நிலைய சாலையில் பழமையான காய்கறி சந்தை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இங்கு 350க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் இயங்கி வந்தன. கரோனா அச்சம் காரணமாக இந்தச் சந்தையை தற்காலிகமாக காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூா் சாலையில் உள்ள காலியிடத்தில் செயல்பட அலுவலர்கள் முடிவு செய்து அங்கு இடமாற்றம் செய்தனர்.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து காய்கறி சந்தை வையாவூா் சாலையிலேயே செயல்பட்டு வந்தது. சிறு வியாபாரிகள் தற்காலிக காய்கறி சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி அவரவா் பகுதிகளுக்கு கொண்டு போய் விற்கும் வகையில் மொத்த வியாபாரிகளும் இங்கு காய்கறிக் கடைகளை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருப்பதால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. ஒரு சில நாள்களுக்கு முன்பு மழை காரணமாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை விட்டு வையாவூா் சாலையோரங்களில் வந்து காய்கறிகளை விற்க தொடங்கினாா்கள்.

தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருப்பதால் காய்கறி சந்தையில் வியாபாரம் செய்ய முடியாத வகையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான காய்கறிக் கடைகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்க வந்த சிறு வியாபாரிகளும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட நிர்வாகம், வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் காய்கறி சந்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. கல்லூரி மைதானத்தில் பெரும்பாலும் ஆற்று மணல் காணப்படுவதால் மழை பெய்தாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என உத்தரவாதம் அளித்துள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி கூறுகையில் தொடர்மழை காரணமாக வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வையாவூர் சாலையில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் மேடான பகுதியில் புதிதாக சந்தையை உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் கூடுதலாக நூற்றுக்கும் அதிகமான காய்கறி கடைகள் அமைப்பதற்கும் வசதி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.