ETV Bharat / briefs

திருச்சியில் 7ஆம் தேதி முதல் காய்கறி விற்பனை நடைபெறாது: வியாபாரிகள் அறிவிப்பு

author img

By

Published : Jun 5, 2020, 5:41 AM IST

திருச்சி: வரும் 7-ஆம் தேதி இரவு முதல் திருச்சியில் அனைத்து இடங்களிலும் காய்கறி விற்பனை நடைபெறாது என்று காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

திருச்சியில் 7ம் தேதி முதல் காய்கறி விற்பனை நடைபெறாது:  வியாபாரிகள் அறிவிப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சுவராசு ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

இதன் பின்னர் சங்க தலைவர் கோவிந்தராஜுலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி ஆகும். அந்த திருச்சியின் மையப் பகுதியாக காந்தி மார்க்கெட் விளங்குகிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலான இந்த சந்தை கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டது.

இங்கிருந்த மார்க்கெட் திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு திறக்கப்பட்டது முதல் வியாபாரிகள் பல்வேறு கொடுமைகளை சந்தித்து வருகிறோம். அதனால் காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று அமைச்சர்கள், ஆட்சியரை சந்தித்து பல முறை மனு அளித்தோம்.

ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் வரும் 7ஆம் தேதி காலை காந்தி மார்க்கெட் திறப்பதற்கான அறிவிப்பு அரசு மற்றும் ஆட்சியரிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் 7-ஆம் தேதி இரவு முதல் அனைத்து பகுதிகளிலும் காய்கறி விற்பனை செய்ய மாட்டோம்.

பொன்மலை ஜி கார்னர் தற்காலிக சந்தை மற்றும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகள் என அனைத்து இடங்களிலும் காய்கறி விற்பனை நடைபெறாது என்பதை அனைத்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு 91 ஆயிரம் தென்னை கன்றுகள் வழங்க திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.