ETV Bharat / briefs

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை

சென்னை: மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை மீட்கக் கோரி வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Vaiko Press Realease
Vaiko Press Realease
author img

By

Published : Sep 26, 2020, 2:01 PM IST

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நேற்று மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தில் “சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ஆம் தேதி 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்களுடைய படகு எண் ஐசூனு-கூசூ-02 ஆஆ 2029. ரகு, லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி, கண்ணன், தேசப்பன், முருகன், எல்.தேசப்பன் ஆகியோர், துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அவர்களுடைய ஜிபிஎஸ் கருவி பழுதாகிவிட்டது.

ஜூலை 28 ஆம் தேதி வரை தொடர்பில் இருந்தனர். ஆகஸ்டு 7 ஆம் தேதி அவர்கள் கரைக்குத் திரும்பி இருக்கவேண்டும்.

ஆனால், அதன் பிறகு அவர்களிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் வேதனைக்குள்ளாயினர்.

53 நாள்கள் கழித்து செப்டம்பர் 13 ஆம் தேதி அவர்கள் மியான்மர் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கிடைத்தையடுத்து நண்பர்கள், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அவர்களை மீட்பதற்காக இந்திய அயல்உறவுத் துறை முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் திரும்பி வர முடியவில்லை.

மியான்மர் கடற்படையினர் அவர்களை தங்கள் நாட்டில் தரை இறங்க விடவில்லை. படகிலேயே இருக்கும்படி கூறிவிட்டனர்.

எனவே அவர்கள் பல மாதங்களாக படகிலேயே இருக்கின்றனர். இதற்கு இடையில் பாபு என்ற மீனவரை பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அனுப்பினோம். ஆனால் அவரைக் காணவில்லை என்று மியான்மர் கடற்படையினர் கூறுகின்றனர்.

அவர் படகுக்குத் திரும்பி வரவில்லை. அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை உயிரோடு இருக்கின்றாரா என்பதும் தெரியவில்லை.

தங்கள் பாதுகாப்பில் இருக்கின்ற ஒருவரை மியான்மர் கடற்படையினர் பொறுப்பு அற்ற முறையில் நடத்தி இருக்கின்றனர்.

53 நாள்களாக கடலில் தத்தளித்த போதிலும் உயிருடன் மீண்டு வந்த மீனவர்களுள் ஒருவர் கரையில் இருந்த பொழுது காணாமல் போயிருக்கிறார் .

அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து இருக்கின்றனர்.

இது குறித்து வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

எனவே மேலும் தாமதமின்றி மீனவர்கள் அனைவரையும் சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

அதற்கான முயற்சிகளைத் தாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.