திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திர அறைக்குள் நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் மாட்டு சாணத்தை பூசி, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க எடுத்துக் கொண்ட முயற்சி, தோல்வியடைந்ததால் உடைத்த ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே விட்டுவிட்டு கொள்ளையர்கள் வெளியேறினர்.
இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் தப்பியது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.