திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை தச்சநல்லூர் புறவழிச்சாலையில் நள்ளிரவு இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் லாரி இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்த லாரி ஓட்டுநர்கள் உட்பட மூவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில், வண்ணாரப்பேட்டையில் இருந்து தச்சநல்லூர் நோக்கிச் சென்ற லாரி மீது எதிரே தச்சநல்லூரில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி வந்த மினி லாரி நேருக்கு நேர் மோதியுள்ளது.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ற லாரியை, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நெட்டூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. எதிரே வந்த மினி லாரியில் மாடுகள் ஏற்றி வரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த விபத்தில் மினி லாரியின் பின்பக்கத்தில் இருபுறமும் உள்ள கதவுகள் சேதமடைந்ததால் அதன் பலகைகள் கிழித்ததில் இரண்டு மாடுகள் உயிரிழந்தன.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாரிதாஸ், கிஷோர் சுவாமி மீது நடவடிக்கை கோரி மனு