கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவலர் மையத்தில் ஐபிஎஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த காவலர் இருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டது .
இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இது குறித்து, பயிற்சி மைய மூத்த அலுவலர் கூறுகையில், பல வீரர்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களின் முடிவுகள் வரவில்லை எனக் கூறினார்.