ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று குறைந்துவந்த நிலையில், சென்னையில் இருந்து வந்தவர்களால் மீண்டும் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.
அந்த வகையில், பவானி பகுதி அருகே உள்ள இரண்டு பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் இருவரும் கடந்த 16ஆம் தேதி சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.