நீலகிரி மாவட்டத்திற்கு குன்னூர் மலைப்பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவருகின்றன. அண்மைகாலமாக கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது அதிகரித்துவருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிவேகத்தில் வரும் வாகனங்களை நவீன கருவிகளை வைத்து போக்குவரத்துக் காவல் துறையினர் கண்டறிந்து அபராதம் விதித்துவருகின்றனர். இருந்தபோதிலும் ஒரு சில இடங்களில் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11 மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மார்க்கெட் பகுதிக்கு மளிகைப் பொருள்களை ஏற்றிவந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மலை ரயில் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இருந்தபோதிலும் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.