கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 149ஆவது பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முதன்மை செயலாளருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகரச் செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில், அக்கட்சியினர் வஉசி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.